சிந்தும் மணித் துளியில்
சிந்தும் மணித் துளியில்
சித்திரம் வடியுதடி
வேண்டும் கரங்கள் எல்லாம்
சீண்டிடும்,
அவன் முகம் தெரியுதடி
கண்டும் காணாததுமாய்
கண்ணனின் கண் பார்வை
கோணுதடி,
வண்டும் மலர் போல
இங்கொரு காட்சி தெரியுதடி
கட்டுடல் காளையடி
அவன் முகம் கலையான களையடி,
மொட்டுடல் நான் விரிக்க
மோகத்தின் உத்தமம் புரியுதடி