தாயாய்

சுமப்பதை ஒரு பொருட்டாக
கருதியதே இல்லை

சுமைகூலி கேட்காத கழுதை
நான்

ஆனாலும் ஒரு பெருமை

என் பொருட்டு ஊரெங்கும்

சுமைதாங்கி கற்கள் அன்று

இன்று வழக்கொழிந்து போன

என் பெருமை சொன்ன
அடையாளம்

மட்டும் காணது போகவில்லை

என் சுதந்திரமும் காணாது
போனது

என்பொருட்டு வேறு ஏதேனும்
யோசியுங்கள்

நான் என்றென்றும் சுமக்க
தயாராய்

இந்த பூமியைப் போலொருத்
தாயாய்

எழுதியவர் : நா.சேகர் (21-Oct-19, 10:41 am)
Tanglish : THAAYAAI
பார்வை : 1685

மேலே