அன்பே ஆருயிரே

ஓடையிலே கலந்தோடும் செந்நீரைப் போல....
என் உள்ளமதில் கலந்தோடியவளே...!

ஆடியிலே வீசுகின்ற காற்றைப் போல....
என் ஆண்மைதனைக் கவர்ந்து போனவளே...!

மார்கழியில் பொழிகின்ற முன்பனியைப் போல....
என் மனதுக்குள் இனிமையைப் பொழிந்தவளே...!

கோடையிலே உணருகின்ற வெயிலைப் போல....
என் எண்ணமதில் உணர்வைத் தந்தவளே...!

வெட்டவெளியில் உலாவுகின்ற தென்றலைப் போல....
என் நெஞ்சமதனை வருடுகின்ற பூங்காற்றானவளே...!

நாளங்களில் ஓடுகின்ற குருதியைப் போல....
என் இதயமதில் ஓடுகின்ற உயிரானவளே...!

நெஞ்சாங்கூட்டுக்குள் நிற்கின்ற இசையே....
என் எண்ணமெல்லாம் வண்ணமெல்லாம் நீயே...!!
அன்பே! அதனை அள்ளித் தருகின்ற ஆருயிரே...!!!

வேல் முனியசாமி...

எழுதியவர் : வேல் முனியசாமி (27-Oct-19, 8:41 pm)
சேர்த்தது : வேல் முனியசாமி
Tanglish : annpae aaruyire
பார்வை : 288

மேலே