பிஞ்சுமொழி
பிஞ்சுமொழி
வளைந்து நெளிந்து
குழைகின்றன!
நசுங்கி சுயம்
இழக்கின்றன!
வசமாய் மாட்டி
தவிக்கின்றன!
மூச்சுமுட்டித்
திணறுகின்றன!
சிக்கிச் சிதறி
சின்னாபின்னமாகின்றன!
சிதைவு பட்ட உன் புதிரான மழலை சொற்களின்
எதிர் நிற்க முடியாது
மந்திர சொற்களும்
நற்கவிதைச் சொற்களும்
ஏற்றுக் கொள்கிறது பழி!
தன் பிறவிப்பயனடைந்து
புதிது புதிதாய்
கற்றுக்கொள்கிறது மொழி!