காதல் வலி

ஒரே ஒரு பார்வையால்
என் மனதை கிரங்கவைத்து
காந்தம்போல் உன் வசம்
இழுத்துக்கொண்டாய் , பின்
தேனூறும் செவ்விதழ்கள்
திறந்தும் திறவாதிருக்க
ஒரு புன்னகையும் உதிர்த்தாய்
என்னை மறந்தே நான்
ஏதேதோ கற்பனையில் பயணிக்க
கனவுலுகுக்கு சென்றேன் உன்னோடு
கனவு கலைந்து நனவுலகு திரும்ப
நீ இன்னும் என் எதிரே.......
உன் கண்களும் திறந்திருக்க
உன் பார்வையோ என் மீது படவில்லை
உன் இதழ்கள் புன்னகைக்கவில்லை
நீயோ ஆழ்ந்த மௌனத்தில் ......
புன்னகைத்து என்னை தீண்டிவிட்டாய்
இப்போது புன்னகைக்காது இருக்க
என் மனம் புண்ணாகிறதே
ஏனடி இப்படி என்னை வதைக்கிறாய் என்னை
இதுதான் காதலில் சீண்டிப்பார்த்தலா....
அறியாது வாடும் நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Nov-19, 1:03 pm)
Tanglish : kaadhal vali
பார்வை : 157

மேலே