கண்ணில் கயலாட காற்றில் குழலாட
கண்ணன் இசைத்த குழலிசையில்
யமுனையில் அலைகள் அசைந்தாட
கண்ணில் கயலாட காற்றில் குழலாட
வெண்நுதலில் பிறை நிலவாட
புன்னகை இதழ்களில் முத்தாட
முத்தார மார்பில் துகிலாட
கண்ணன் காலடியில் வந்தமர்ந்தாள் ராதை
தன்னை மறந்தாள் பிருந்தாவன இசையமுதில் !

