பனித்தூறல்❄️⛷

பனித்தூறல் சொட்டச் சொட்ட
பள்ளி செல்லும் பனிக்காலம்
வெண் பனியில் சறுக்கி
படகோட்டு மாவல் பூத்தவர்களாய்
உள்ளமும் வெள்ளையாய்
உள்ளூர ஆனந்தம்
பொங்கித்தழும்புது
பனிக்கும்பலில் கால்கள்

மகிழூந்தில் படிந்த
வெண்பனிப்பூக்கள்
தட்டியே விட்டாலும்
ஒட்டியே வருகிறது;
வெற்றுக் கால்களில் படிந்த
கடற் கரையோர மணல்களாய்

உறைபனியில் பட்டுத்தெறிக்கும்
மின்விளக்கொளி
கொத்து மல்லிகை
பூத்தாற்போல் மரங்கள்

அப்பப்பா என்ன விளைச்சலென
உள்ளூர புழுங்கித்தள்ளுகிறது
மக்கள் மனங்கள்;
அள்ளியெறியுமலுப்பில்

பனிக்கட்டிகளோரங்கட்ட
இயந்திரங்கள் உறுமல்
பணிக்குச் செல்லுமவசரத்தில்
பயணிகள் சிணுங்கல்
சிதறுண்ட சினோவில்
சிலிர்த்து சிக்குண்டு;
பாவமந்த பேருந்தோட்டுனர்கள்

ஊசிபோல் உள் நுளையும்
பனியின் வேட்கை
விரல்களின் நுனியில்
சுள் சுள்ளென்று குத்த
உடல் விறைத்து
உள்ளம் உதற
கால நிலையிலில்லை- பிழை
கனக்காத உன் உடையிலேயென
வெள்ளையர்கள் பதில்கள்!

இப்படி இப்படியே கழிகிறது
பனியோடு போராட்டமும்
பனியோடு மகிழ்வும்
இயற்கையை வென்ற
மனித வாழ்வு
இன் நாட்டில்!

எழுதியவர் : யோகராணி கணேசன் (12-Nov-19, 3:57 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
பார்வை : 176

மேலே