தமிழர்களின் கோவிலே இயற்க்கை மருத்துவமனை தான்

இறை உறையும் மனை அது இறை மனை அல்லது கோவில் அல்லது கோயில் என்று அழைக்கப்படுகிறது .

வெண்கல மணி ஓசை :

உடல், மனம் ,உயிர் மூன்றும் உடலில் உள்ள ஏழு சக்கரமும் மின் காந்த அலையும் சீர்படுத்தி ஒரே நேர்க்கோட்டில் பாதம் முதல் தலை உச்சி நோக்கி உயிர்சக்தி களை இயக்கிட வெண்கல மணி ஓசை உதவுகிறது .

கருங்கல்லை சுற்றுவது :

உடலின் மின்காந்த சக்தியை அதிகரித்து உடல் இயக்கத்தை சீர்படுத்தி உடல் உயிர் , மனதை மேல் நோக்கிசெலுத்தி செழுமையாக வைத்திருக்க கோவிலை சுற்றி வரவேண்டும் .

மந்திர உச்சரிப்புக்கள் :

உடலின் மூளை ,உதிரம், சவ்வு , உதிர நாளங்கள் உடல் உறுப்புகள் ,தசைகள் , எலும்புகளை சீராக்கும் ,நோய் நீக்கி உடலின் செயலாற்றலை அதிகரிக்கும் .ஜப்பானிய ஆராச்சியாளர் இதை நிருபித்துள்ளார் .

தீர்த்தம் :

உடல் நோய் குணமாக உள்மருந்து . துளசி ,இளநீர் .உணவே மருந்து .

சந்தனம் /குங்குமம் :

கருங்கல், மந்திர உச்சரிப்பால் மனோ சக்தியை அதிகப்படுத்தி நரம்பு மண்டலங்களை குளிர்வித்து அதிகப்படுத்திய சக்திகள் உடல் சூட்டால் வெளியேறாமல் தடுக்க சந்தனமும் குங்குமமும் மூன்றாவது கண் எனப்படும் ஞாந கண் மேல் இடப்படுகிறது .

ஐம்பூதங்கள் :

சாம்பிராணி (ஆகாயம் )

ஊதுபத்தி (காற்று)

தீபாராதனை நெருப்பு , தீபம்

திருநீர் : நீர்

குங்குமம் : உயிர் /மனம்

ஐம்பூதங்களினால் ஆன இவ்வுடலை இயற்கையை கொண்டே சீராக இயக்கி நலமுடன் வாழ நாள் தோறும் கோவிலுக்கு சென்று இயற்கை மருத்துவம் செய்தல் வேண்டும் .

சித்தர் :

ஐம்பூதங்களால் ஆன இவ்வுடலை கொண்டு சித்தம் தெளிந்து எட்டு வகையான சித்திகள் பெற்று அதன் மூலம் மற்ற சித்திகள் பெற்று ஈசனோடு இரண்டற கலந்து ஒன்றானவர்கள் .

சக்திமிக்க சிவாலயங்களில் அனைத்து சித்தர்கள் வழிபாடு இருக்கிறது என்போது இங்கே நினைவு கூறத்தக்கது .

இறைவன் :

ஈசன் படைத்தல் , காத்தல் ,மறைத்தல் ,அருளுதல் ,அழித்தல் எனும் ஐந்தொழில் களை செய்பவர் .

உலகை படித்த ஈசன் லிங்க வடிவம் மற்றும் ஒளி வடிவத்தில் உள்ளவன் .

இலிங்க வடிவம் :

சூரிய ஒளி இவ்வுலகில் இலிங்க வடிவத்தில் விழுகிறது .

ஒளி வடிவம் / சூரியன் :

இருளை போக்கும் ஒளியானவன் சூரியன் .

நிலவு /பிறை :

நிலவு குளிச்சியானது ,பெண் தன்மையுடையது

நவகிரங்கள் , இருபத்தேழு நட்சத்திரங்கள் ,பனிரெண்டு ராசிகள் மொத்தம் 48 . ஒரு மண்டலம் என்பது 48 .

சில தத்துவங்கள் 96 --இரண்டு மண்டலங்கள்

108 - திவ்ய தேசங்கள் எவை 108 வர்ம புள்ளிகளை குறிக்கிறன்றன .இதை கொண்டு உடலில் ஏற்படும் நோய்களை குணமாக்கலாம் .

அட்டமாசித்திகள் :

8 வகையான சித்திகள் ,ஐம்பூதங்களோடு சேர்ந்தும் பிரிநுதும் நிற்பது .

நவ கண்டம் :

யோகத்தால் உடலை ஒன்பது பிரிவுகளாக பிரித்து சேர்ப்பது .

தமிழ் சமுதாயம் மட்டும் சமயம் ஒரு மெய்ஞ்ஞான மற்றும் விஞ்ஞான சமயம் .

படித்ததில் பிடித்தது

எழுதியவர் : வசிகரன்.க (17-Nov-19, 3:08 pm)
பார்வை : 84

மேலே