மாலை மங்கும் நேரம்

மாலை மங்கும் நேரம்
உன் மடி சாய வேணும்!
மடி சாஞ்ச பின்பு
நீ தலை கோத வேணும்!
தலை கோதிகிட்டே
ஒரு கதை சொல்ல வேணும்!
கதை கேட்டுகிட்டே
நான் உறங்கி போக வேணும்!
உறங்கி போன என்னை
நீ எழுப்ப வேணும்!
நான் எழுந்த பின்பு
நிறுத்தங்கள் இல்லா
முத்தங்கள் இட வேணும்!

முத்தங்களோடு
அன்பே அந்த நிலவொளியில்
நீயும் நானும்
காதல் செய்ய வேணும்!!!

❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (18-Nov-19, 12:46 pm)
பார்வை : 3516

மேலே