ஆதலால் எழுதினேன்

அழகு சிட்டுக்குருவி அரிதாய் காணலாச்சு
ஆர்ப்பரிக்கும் தூக்கணங்குருவி இற்றுப் போகலாச்சு
இரவில் அலறும் ஆந்தை அழிவின் பாதையாச்சு
ஈசலும் தும்பியும் இல்லா நிலையச்சு
உடும்புக் கூட்டமும் ஊசித்தும்பியும் நசிந்து போயிடுச்சு
ஊரைச் சுற்றும் கருடக் கூட்டமும் அறுகிகுறுகலாச்சு
எங்கும் இருக்கும் மீன்கொத்தியும் எங்கோ போகலாச்சு
ஏலம் போட்டு விற்கும் முறையும் காணா நிலையாச்சு
ஐந்தாறு பேரோடு வாழும் வாழ்க்கை அற்றேப்போச்சு
ஒவ்வாமையைக்கேற்ற உணவே எங்கும் உலகை ஆளலாச்சு
ஓடும் பூமியின் ஓட்டம் மட்டும் மாறா நிலையாச்சு
ஒளடதமின்றி வாழும் வாழ்வு கேள்விக்குறியாச்சு
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (28-Nov-19, 9:39 am)
பார்வை : 60

மேலே