மனித மிருகத்தை உயிரூட்ட
வண்ணங்கள் பலவாய் பூத்தாலும்
மலர்கள் வாழ்வதில்லை நெடுநாட்கள்
சின்னதாய் காய்கள் காய்த்தாலும்
பழுப்பதில்லை வெகு விரைவினிலே
அகலமாய் பூமி நீண்டிருந்தாலும்
அத்தனையும் மண்ணும் நஞ்சநிலமில்லை
எத்தனை தடவை வெட்டினாலும் - கோரைப்புல் அழிஞ்சுப் போனதைக் கண்டதில்லை
எவ்வகையில் விஞ்ஞானம் வளர்ந்தாலும்
உடல் உறுப்புகளை வளர்க்க இயலவில்லை
மிருகங்களின் குருதியை உட்செலுத்தி
மனித மிருகத்தை உயிரூட்ட முடியவில்லை
இயற்கையைக் கைக்கொள்ள உருவாக்கிய
பணமென்ற மாயைக்கு பணியாதோர் உலகிலில்லை.
---- நன்னாடன்.