நீயே பேரழகி♥️

நீயே பேரழகி🌹♥️

கோபம் கொண்ட மனைவியை
மாயம் செய்யும் கணவன்.

நீ தான் உண்மையில் பேரழகி.
ஐஸ்வர்யாராய் தான் இதுவரை பேரழகி என்று நினைதிருந்தேன்.
அது உன்னை கண்ட பிறகு அந்த எண்ணம் மிகபெரிய தவறு என்று என்னை திருத்தி கொண்டேன்.
என் அன்னையை தவிர்த்து நிஜத்தில் வேறு எந்த பெண்ணிடமும் பேசியதில்லை (பொய்)
அவள் தான் பாசமானவள் என்று இருந்து எனக்கு நீ என்னிடம் காட்டிய பரிவு அதை விட பலமடங்கு உயர்வு.

உன் உறவினர் திருமணத்தில் மணப்பெண் என் கண்களுக்கு தெரியவில்லை.
ஒட்டுமொத்த உன் உறவினர்களில் நான் உற்று நோக்கியதில் நீ தான் அழகு. நீ மட்டுமே அழகு.
தவறாக நினைக்காதே உன் தங்கையும் சேர்ந்து தான்.(ஆகாச பொய்)
ஒட்டு மொத்த அழகையும் உனக்கே கானிக்கை ஆக்கிய அந்த பிரம்மனுக்கு மிக்க நன்றி.

உண்மையில் நான் அவ்வளவு அழகியா?

என்ன அப்படி கேட்டுவிட்டாய்
உலக பேரழகியே .
உன்னை போல் அழகி உண்டோ
கம்பன் அன்று சீதையை கண்டதால் அவளையே பேரழகி என்றான்.
இன்று கண்டால் உன்னை தவிர அவன் வேறு யாரை பேரழகி என்று வர்ணனை செய்ய முடியும்.
அன்று இளங்கோ மாதவியின் அழகை புகழ்ந்து தள்ளினான்.
இன்று அவன் மங்கை உன் வடிவத்தை பார்த்து இன்னொரு சிலப்பதிகாரமே எழுதியிருப்பான்.
காளிதாசனின் சாகுந்தலை கூட உன்னிடம் தோற்று தான் போக வேண்டும்.
முகிலினங்கள் மறைந்த முழுநிலவே
காந்த விழியால் என்னை சுண்டி இழுக்கும் கந்தர்வ கன்னியே
முக்கனி சுவையை உன் இதழ் தனில் ஒளித்து வைத்து இருக்கும் இன்பசுரங்மே
கான கிடைக்காத அதிசயமே
காதல் செய்வோம் வா
இளைமைக்கு தீனிபோட்டு
காமத்தில் திளைப்போம் வா
வாலிபத்தை சுவைப்போம் வா
இன்பத்தின் எல்லைகளை தொடுவோம் வா
சிற்றின்பத்தின் சிகரம் அடைவோம் வா.

- பாலு.

எழுதியவர் : பாலு (28-Nov-19, 3:20 pm)
சேர்த்தது : balu
பார்வை : 636

மேலே