காதல் ♥️♥️

காதல் 💘

முதல் பார்வையில் முற்றிலும் முடங்கிபோனேன் உன்னிடம்.
காதல் மொழி பேசும் உன் விழிகள்
மாயம் செய்யும் மயக்கும் மந்திர கோல்.
மாதுளை இதழ்களோ முக்கினி சுவை மிகுத்த தேன் கிண்ணம்.
ஒடியும் கொடி
இடையோ வியக்க வைக்கும் விந்தை.
ஆச்சிரியம், அபூர்வம், அபாரம்.
தாமரை பாதத்தால் அண்ண நடை பயிலும் வண்ண மயிலே
சிற்பி ரசித்து செதுக்கிய
அழகு சிலையே
கலை ஓவியமே
இதய துடிப்பின் ஓசையே
நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற என் காவிய நாயகியே
என் காதல் இளவரசியே
உன் கரம் பற்றி காதல் செய்ய ஆசை
உன் மடியில் தலை வைத்து படுதுறங்க ஆசை
உன் பெயரை பல முறை உன் காதுகளில் ரகசியமாக உச்சரிக்க ஆசை
உன் சம்மதத்துடன் உன் இதழ்தனை சுவைக்க ஆசை.

- பாலு.

எழுதியவர் : பாலு (7-Dec-19, 9:15 pm)
சேர்த்தது : balu
பார்வை : 321

மேலே