உன்னை காண வேண்டும்

கூந்தல் ! ! !

கருப்பு அருவியாய் உன் கூந்தலை நீ அவிழ்து விடும் போது மயில் கூட தோகைவிரித்தாடும் அது கார்மேகம் என எண்ணி,

காற்றின் அசைவில் கவி பாடும் அந்த கார்மேக கூந்தல், கொஞ்சும் உனது கன்னம் தடவி நிற்க., கைவிரல் கொண்டு அதை ஒதுக்கி உன் காதோரம் சேர்த்து .,

உனது கன்னம் சிவக்க வெட்கி தலை குனியும் நாணம் காண வேண்டும் .!

கண்கள் ! ! !

கண்களை கவரும் விண்மீன்களாய் உனது கண்கள்,
நீரில் துள்ளி விளையாடும் குட்டி மீன்களாய் இரு விழிகள்,
பட்டாம்பூச்சியின் இறகாய் படபடக்கும் இமைகள் காண வேண்டும் .!

இதழ்கள் ! ! !

நீரில் பூக்கும் தாமரை போன்ற இதழ்கள்,
உதிரத்தை உறைய வைக்கும் தன்மையுடைய செவ்விதழ்கள்,
அந்த இதழ் குவித்து நீ என்னை அழைத்து, உன் காதல் சொல்வதை காண வேண்டும் .!


கனா ! ! !

இமை மூடி தலை சாய்த்தால் வரும் சுகமான கனவாய் - கனவின் வரமாய் உன்னை காண வேண்டும் .!

உயிர் ! ! !

உளி செதுக்காத உயிருள்ள சிற்பமாய் உன்னை காண வேண்டும்,
அதை கண்டு நானும் உயிரோடு சிற்பமாக வேண்டும் .!

சத்தம் இல்லாமல் முத்தம் செய்து என் உயிரோடு ஒளிந்துக்கொள்ளும் உனது ஆசை முகம் காண வேண்டும் .!

வாழ்க்கை ! ! !

நிறமில்லா வாழ்க்கையில், நிறமேற்றும் நீரூற்றாய் உன் ஸ்பரிசம் காண வேண்டும்,
கனா களைந்து கண் விழித்து பார்த்தால் எதிரில் உன்னை காண வேண்டும்,

எனது தாரமாக .!

எழுதியவர் : முஹம்மது உதுமான் (8-Dec-19, 12:52 am)
சேர்த்தது : முஹம்மது உதுமான்
பார்வை : 320

மேலே