நவீன யுகம்

அழுகிறது குழந்தை தொட்டிலில்
அழுகை நிறுத்த
ஓடிவந்தாள் தாய்...

ஆராரோ ஆரிராரோ
தாலாட்டு பாட்டு சத்தம்...

தாய் படவில்லை
அலைபேசியில் ஒலிக்கிறது
குழந்தை சிரிக்கிறது.
நவீன யுகத்தில்
தாய்ப்பால் மட்டுமல்ல தாலாட்டும்

வற்றி விட்டது...

எழுதியவர் : அலாவுதீன் (8-Dec-19, 8:14 am)
சேர்த்தது : ந அலாவுதீன்
Tanglish : naveena yugam
பார்வை : 89

மேலே