போரடிக்க வில்லையடி உன் கவிதை

மார்கழிப் பனியே
மௌனச் சிலையே
தீந்தமிழ்த் தென்றலே
தென்றலில் ஆடும் கருங்குழலே
குழலில் சூடும் மல்லிகை மலரே
மலர் போல் விரியும் செவ்விதழே
செவ்விதழில் சிந்தும் முத்துப் புன்னகையே
புன்னகை பாடும் மௌன ராகமே
ராகங்களில் விரியும் ஏழு சுரங்களே
சுரங்கள் ஏழும் ஏழு வண்ணங்களாய் நிற்கும் பேரெழிலே
போரடிக்க வில்லையடி உன் கவிதை
எத்தனை முறை எழுதிடினும்
மார்கழிப் பனியே
மன்மதன் காதல் கணையே
கணையில் விழுந்த மானிடனை
காத்தருள்வாய் பூமிக்கு வந்த வானத்துத் தேவதையே !

எழுதியவர் : கவின் சாரலன் (11-Dec-19, 10:50 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 60

மேலே