காதல் பயிர்
உன் ஒற்றைப்
பார்வையாலே
என் கல்லிடுக்கில்
நீர் கசிந்ததடி
கற்பாறையாய்
கிடந்த நெஞ்சில்
காதல் பயிர்
முளை விட்டதடி
மரம் வேர் விட்டுப்
பூப் பூக்க
வேண்டுமடி
நீர் வாசம்
இங்கு கிளைவிட்டு
மணம் பரப்ப
மாரியாய்
பெய்ய வேண்டும்
உன் பாசம் !
அஷ்றப் அலி