செல்ல மகன்கள்

செல்ல மகன்கள்

கார்த்திகை மாதத்தில்
பதினைந்தாம் நாள் சாமத்தில்
எனக்குள் ஜனித்த இரு உயிரும்
உலகை பார்க்க போட்டியிட்டு ..
பத்து மாதம் சுமந்தவளுக்கு
பத்து நிமிட வலி கொடுத்து…
பத்திரமாய் வெளிவந்து
அழுகையை அடையாளமாக்கி...
"அம்மா நான் வந்து விட்டேன்" என அடுத்தடுத்து இரு அழுகைகள்
என்னை பரவசப்படுத்திய நாளன்றோ.
ஆம்
வலி கூட வரம் தான்
என உணர்ந்தேன் அப்போது…

இரண்டு சிங்கக்குட்டிகள் என்
இருபுறமும் படுத்திருக்க..
கண்ணத்தோடு கண்ணம் வைத்தேன்..
தாய்மை உணர்ததேன்..
முழுமை அடைந்தேன்…

இதே நாள்
பதினான்கு வருடங்களுக்கு முன்பு…
முகம் பார்த்து சிரித்தார்கள்…
தத்தி தத்தி தவழ்ந்தார்கள்....
எட்டி நடை போட்டார்கள்...
ஒவ்வொன்றும் அழகு...
செல்ல பெயர்கள் பல வைத்து…
அழைத்து அழைத்து அழகு பார்த்தோம்…

முதல் வருடம் வந்ததுமே...
ஒரே மாதிரி ஆடையிட்டு
மிக்கி மவுசு கேக்கு வாங்கி ..
பிறந்தநாளை கொண்டாட....
சொந்தங்களும் வந்தனரே...
வாழ்த்தி விட்டுச் சென்றனரே....

எட்டாவது மாதத்திலே...
காது குத்தும் நேரத்திலே....
என் பிள்ளைகள் அழுகையிலே..
தாங்காத என் மனமோ
தத்தளித்து போனதுண்டு…

மழலை மொழியினிலே
"அம்மா" என்றதுமே..
மயங்கித்தான் போனேனே..
இருவரின் பேச்சினிலும் இனிமையில் திளைத்தேனே…

இரண்டரை வயதினிலே
பள்ளிக்கூடம் சேர்க்கனுமே...
எப்படித்தான் பிரிந்திருந்தேன்
பாசத்தில் திளைத்திருந்தேன்..

முதல் நாள் பள்ளிக்கு
கையோடு கை கோர்த்து
ராஜ நடை போட்டு..
ரத்தினங்கள் செல்கையிலே...
சொக்கித்தான் போனேனே...
சொர்க்கத்தையும் கண்டேனே..

ஐந்தாம் வயதினிலே..
வேலம்மாள் பள்ளியிலே...
பருப்புச்சோறு கட்டி ..
பத்திரமாய் அனுப்பி விட்டு..
வரும் வரை காத்திருந்து
வாரி அணைத்துக் கொள்வேன்…

வளர்ந்தார்கள்...
பதினான்கு வருடம் கடந்தார்கள்…
இன்று தோளுக்கு மேல் வளர்ந்த தோழர்களாய்…

எட்டாம் வகுப்பு படிக்கையிலே...
எட்டி பார்த்த மீசையினை...
தொட்டு பார்த்த மெய் அழகை
என்னவென்று நான் சொல்ல…


என் வாழ்நாள் ஆதாரங்களே...
என் பெண்மையின் அடையாளங்களே...
என் சந்தோசத்தின் முழுமைகளே....
எங்கள் வீட்டுச் செல்வங்களே…
தங்கங்களே...
இரட்டை சிங்கங்களே….
நீடூழி வாழ்க...

எழுதியவர் : பானுப்பிரியா (14-Dec-19, 8:26 pm)
Tanglish : sella magankal
பார்வை : 162

மேலே