நட்பிற்கு அழகு

பழகிடும் நண்பனின் போக்கில்
குறையேதும் இருப்பின் அதை
அவனிடம் கூறி அக்குறையிலிருந்து
அவனை வெளிக்கொணர்தலே உண்மை
நண்பனுக்கு அழகு மாறாக அவனை
விட்டுப்பிரிதல் நண்பனுக்கு அழகல்ல
இன்பத்தில் சேர்ந்து இன்புறுதல்
துன்பம் வரும்போதும் நண்பன்
துன்பத்தை தனதாய் நினைத்து
பழகுபவனே உண்மை நண்பன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (31-Dec-19, 4:57 pm)
Tanglish : natpirku alagu
பார்வை : 608

மேலே