எழுத்தில் எழுதிப் பார்க்கும் உன்னை
முழுநிலா பார்க்கும் முகில்திரை நீக்கி
முழுநி லவுநிகர் நீயும் வருவாய்
பழுதிலா செந்தமிழி லோரினிய வெண்பா
எழுதிபார்க்கும் என்னித யம் !
முழுநிலா பார்க்கும் முகில்திரை நீக்கி
முழுநி லவுநிகர் நீயும்-- எழுத்தில்
பழுதிலா செந்தமிழி லோரினிய வெண்பா
எழுதிபார்க்கும் என்னித யம்
-------முறையே ஒரு விகற்ப இன்னிசை நேரிசை வெண்பாக்கள்