உன் வருகையின் அடையாளங்கள் !!!
எப்போதும் இதழோர புன்னகை,
தனியே புலம்பல்,
கவிதை என சொல்லி
எனது கிறுக்கல்களாய் உன் பெயர்,
இரவில் விழிப்பு,
பகலில் உறக்கமின்றி கனவு,
பார்ப்பவை யாவும் அழகாய் தோன்ற
இவை யாவும் என்னுள்
நீ வந்ததற்கான அடையாளங்களாய்
என்றும் என்னுள் நீங்காது
நிலைத்து இருப்பவை!!!