பொங்கலோ பொங்கல்

உழுதுண்டு வாழ்வதுவை உயர்வாக மதித்துநாளும்
பொழுதும் உழைத்து அக்கறையாய்ப் பயிர்செய்து
விழுகின்ற வியர்வைகளை நெல்மணியாய்ச் சேகரித்து
பழுதில்லாக் கதிரறுத்து பக்குவமாய் புழுதிநீக்கி
கழுவிய அரிசியினை களைந்து உலையிலிட்டு
பொழுதினிலே பொங்கலிட்டு எல்லோரும் ஒன்றாக
தொழுதே இறைவனை உண்டு மகிழும் பொங்கல்
பொழுது போல் உழவராம் எங்களுக்கு எந்நாளும்
வழுவிலா வாழ்வைத் தர அருள் புரிவாய் பேரிறைவா !

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (14-Jan-20, 2:51 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : pongalo pongal
பார்வை : 2773

மேலே