சூரியப் பொங்கல்

சூரியப் பொங்கல்

பொங்கலோ பொங்கல் சூரிய வணக்கம்
எங்கள்குடும்பம் செய்யும் வணக்கம்
பொங்கல் வணக்கம் வருடம் ஒருமுறை
எங்கள் முன்னோர் வணக்கமோ தினம்தினம்
ஆயிரம் தினகரன் காண்டல் அற்புதமாம்
ஆயிரம் பௌர்ணமி காண்டலும் பெருமையாம்
கோளும் கோனா திருக்க வணக்கம்
நாளும் காலைத் தினகரன் வணக்கம்
பாழின் கோளாம் பகலவன்
பாழில் பாழாகா வணக்கம் இயற்கைக்கே

விளக்கம் :. வானில் கோள்கள் அந்தரத்தில் அதனதன் ஈர்ப்பில் ஓடிமோதா சுழல்கிறது.
சில கோள்களும் நட்சத்திரங்களும் நிலையாய் நிற்கிறது. சூரியன் வடக்கு தெற்கு சுழற்சியில்
நிலைமாறாதிருக்க உலகநன்மைக்கருதி சூரிய வணக்கத்தை ஒரு; செய்வார்கள்.


இந்துமதம் ஆறும்நம் சொந்தசைவம் வைணவம்
அந்தசாக்தம் கௌமாரம் சௌரமும் - - விந்தையாம்
அந்த கணபதிக்கு சொந்தம் கனாபத்யம்
எந்தைமுன் னோர்தொழுத தும் by

எழுதியவர் : பழனிராஜன் (17-Jan-20, 6:34 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 53

மேலே