வந்தேறிகள்
வந்தேறிகள்
கவிக்கம் பனைக்குலோத் துங்கனே நாடுகடத்த
கம்பன்தான் உண்டோ குரங்கேற்கா கொம்பென
சோழவள நாட்டையும் விட்டுக் கடந்தான்
சோறுதேடி வேறுநாடு சென்றவன்வந் தேறியா
யாருக்கு யார்சொல் மடையரே வந்தேறி
யார்சாதிக் காரிப்போ வந்தேறி
தாயின் கருப்பை தேசம் விடுத்தங்குப்
பாயில் விழுந்த குழந்தையும் வந்தேறியா ?
பரந்து விரிந்த உலகில் படைநடத்தி
பாராண் டவனெல்லாம் வந்தேறியா ? தூரவோட்டு
ஆஸ்த்ரே லியாமுன் தமிழ்நாடாம்
ஆங்கிலம ரிக்காவை துரத்து வதுயாரோ