கம்பனும் ஒளவையும் I one

கம்பனும் ஒளவையும். I (one)

ஒளவை திருக்குறளை மதுரையில் அரங்கேற்ற படாத பாடு பட்டதாக செவி வழிச் செய்திகள்
இன்னும் மறைந்து விடவில்லை. திருவள்ளுவர் காலம் கி. மு 2 ஆம் நூறாண்டு என்பர்
சித்தர்களோ இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் முந்தியவர் என்பர். அப்படியானால்
ஒளவைக்கும் வள்ளுவனும் சம காலத்தில் இருந்தார் என்பதற்கு சான்றாகும். அப்படி
யானால் அதற்கு சரித்திரங்கள் எங்கே. ஒருத் தமிழ்த் தலைவர்களும் தேடிக் கண்டுபிடிக்க
உண்மையில் முயற்சி செய்யவில்லை. நாமும் சரித்திரங்கள் கட்டாயம் எழுதிதானிருப்போம்
ஆனால் அவைகள் அழிக்கப்பட்டு விட்டது. அதை விவரிக்க நீளும்.

வள்ளுவர் சித்தர் பல ஆயிரம் ஆண்டுகளாக ஆயுளை நீட்டி யோகம் செய்து வாழ்ந்து வருபவர்
அதேபோல் ஒளவையும் யோகம் பற்றி முக்கியக் குறிப்பு களைத் தன் 310 குறள் களில்
எழுதியுள்ளார். ஆகவே பெரும்புலவர்கள் தெய்வீகம் நிறைந்தவர்.. ஆகவே அவர்களின்
காலத்தை ஆராய்வதை விடுத்து பேரறிஞ்சர்களே புலவர்களின் பாடல்களை மக்களுக்கு
முழு வதையும் விளக்குங்கள். குட்டையைக் குழப்பாதீர்கள்.ஒளவையின் யோகம் பற்றியக்
குறள் 310 படித்து விளங்கியவர்கள் காலத்தைப் பற்றி பேசட்டும்.


ஒளவையார் 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார் என்பார்கள் இருக்கட்டும். ஒளவைக்கும்
கம்பனுக்கு எப்போதும் மோதல்கள் பல ஏற்பட்டுள்ளது. ஒரு சமயம் கம்பன் ஒளவையை
மட்டம் தட்ட அவரை அடீ என்று அணைக்க எண்ணம் கொண்டு ஒரு விடுகதை போல் சொல்லி
அதன் விளக்கம் கேட்டாராம் அது இதுதான்" ஒருகாலடீ நாலிலைப் பந்தலடி " என்று
ஆவாரஞ் செடியை மனதில் எண்ணிச் சொன்னாராம்.


ஒளவையோ கம்பன் தன்னை அடீ என்று சொல்லியதை புரிந்துகொண்டு பதில்
உத்திரவாக

"எட்டேகா லட்சணமே யெமனே றும்பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே- - முட்ட மேற்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
யாரையடா சொன்னா யடா

என்று எல்லோர் முன்பாகவும் மேற்கண்ட வெண்பாவைச் சொல்லி கம்பரை வெட்கமுரச்
செய்துள்ளார்.

தொடரும்

எழுதியவர் : ஒளவை பிராட்டி தேர்வு பழனி (19-Jan-20, 8:25 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 118

மேலே