கண்ணெனக் காத்திடு

மண்ணில் உழுதிடும் விவசாயி
மகிமை என்றும் அதிகம்தான்,
வண்ணம் பச்சையாய் ஆக்கியேதான்
வயலில் செந்நெல் விளையவைப்பான்,
பெண்ணும் ஆணும் சேர்ந்தேதான்
பெரிதும் உழைத்துப் பயிர்வளர்ப்பர்,
கண்ணெனக் காத்திடு விவசாயியை
கருத்தாய் உணவுநெல் தருவதாலே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (27-Jan-20, 7:10 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 89

மேலே