பூக்களே தீக்குளித்து வந்தீர்களோ

பூக்களே தீக்குளித்து வந்தீர்களோ
செம்மலராக
பூக்களே வானத்தின் வரம்பெற்று வந்தீர்களோ
நீலவண்ணத்தில் மலர
முல்லையே மல்லிகையே வெண்மையை
உங்கள் மேனியில் தீட்டிய ஓவியன் யாரோ ?

இவைகளின் உந்தலில்தான் இவளைப் படைத்தாயோ இறைவா
செம்மலர் பூவிதழில் முல்லை புன்னகையில்
நீலவிழிகளுடன் ரோஜா மேனி அழகில் .....

எழுதியவர் : கவின் சாரலன் (27-Jan-20, 7:14 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 110

மேலே