காத்திருக்கும் கவிதை
கொரோனோ வைரஸ் தாக்கியச்
சீனாக்காரன் போல
எழுந்து நடமாட முடியாமல் எழுத்தாணி.
கற்பனைக் குதிரையோ
வெண்தாள் வீதிகளை மறந்து
குறுக்கு வழியால் ஓடித்
தன் குடிசைக்குள் நுழைந்து
கம்பளி போர்த்தித் தூங்குகிறது.
ஊரெல்லாம் தூங்க ஆரம்பித்ததும்
தன் பேராயுதத்த்தின்
ஊசிக் குத்தல்களால்
போர்வைக்குள்ளும் நுழைந்து
நடுங்க வைக்கிறது கட்டார் குளிர்.
இனி வாய்தா வழங்கப்பட்ட
வழக்கொன்றைபோல் குறிப்பிட்ட நாள்வரைக்
காத்துக்கிடக்கும் கவிதை.