காதலி என்னைக் காதலி

வெள்ளை நிலவும் நீ
வெண்பனி நீ
வெயிலில் நிழலும் நீ
வேனிற்காலம் நீ
கண்ணின் மணியும் நீ
கார்மேகக் குழலி நீ
கன்னித் தமிழும் நீ
காந்தர்வக் கன்னி நீ
அல்லி மலரும் நீ
ஆனந்த நடனம் நீ
அறிவுச்சுடரும் நீ
ஆகாயச் சூரியன் நீ
மண்ணில் வைரமும் நீ
மாசில்லா மங்கை நீ
மலரில் மல்லிகையும் நீ
மாலையில் இனிமை நீ
உடலில் உயிரும் நீ
உன்னத பெண்மை நீ
ஊரில் சிறந்தவளும் நீ
உலகை வெல்பவள் நீ

இத்தனை நீயும்
ஒருங்கே இருந்து
என்னுள் கலந்து
எனை ஆள்பவளே!
உன்னை நீங்கின்
என்னுயிர் அகலும்
என்பதை உணர்ந்து
என்னிடம் சேர்வாய்!

அன்பைத் தந்து
ஆருயிர் காப்பேன்
இறுதி வரையில்
இணையாய் இருப்பேன்!
கண்ணின் மணியென
காதல் செய்வேன்
காலம் முழுதும்
காத்து நிற்பேன்!

எழுதியவர் : திருமகள் மு (9-Feb-20, 6:46 pm)
சேர்த்தது : திருமகள்
பார்வை : 2173

மேலே