Ip
இளமை தூக்கி எரிந்த கல் நான், வறுமை வளர்த்தெடுத்த மரம் நான்,
சோகம் சோதித்த இன்பம் நான்,
தனிமை தத்தெடுத்த சமுகம் நான்,
பனி போர்த்திய பாறையிலும்
அனல் கொலுத்தும் பாலையிலும் புனல் இல்லா போதினிலும்
தினம் பொழுதைப் போக்கும்
மதிகெட்ட மானிடரில்
நானும் நானும் ஒருவன்
பிரிந்த காதல் -அதில்
எரிந்த இதயம்
கல்லூரி காலம்
கண்ணில் வரும் கனவு
பள்ளிப் பருவம்
பாதை தந்த பயிற்சி
எல்லாம் எல்லாம் எந்தன் மனதில்
எளளிநகைத்து போகும்
உற்றவர் உறவினர்
உயிர்விடும் போதினிலும்
பெற்றவள் மூப்பினிலும்
என் தங்கை வலைகாப்பினிலும்
என் பங்கென்றே பணமொன்றே வாழுதடா...
என்ன பாவம் செய்தேனோ
மனம் இங்கு வேகுதடா...
-கல்லறை செல்வேன்