என் காதலி

பாலின்றோம் கவிதை
என் காதலி ...
மோகமோ நீ மோனமோ
வா வா தை தை வா வா
மேகமே மேகமே தா தா
நீ நீ தா தா
தேகமே சுக தேகமே .
நீ மா வா தா மா நீயென் மாதா
தேன் கவி தேன் - உன்னில்
நான் கரைந்தேன்
தேயாதே வான்நிலவே தேயாதே
தேடாதே தொலைத்து பின் தேடாதே
போகாதே உன்நினைவு
எனைவிட்டு போகாதே
வைகை நீரே வை கை - நீ
நான் நீந்திமகிழும் பொய்கை .
மங்கையுன் வசம் மலரெல்லாம் வீசும்
மனமெல்லாம் பேசும்
கா கா என கரைகிறேன் -
கன்னியுனக்குள் கரைகிறேன்.
வாடா மலரே வாடாதே
தோணாதோ என்நினைவுகள்
உன்னில் தோணாதோ
வாடுதே கண்கள் தேடு வா
மேளதாளமே மேகராகமே
மாயமா மேயும் உன்விழிகள்
தருமோ ஆறா காயமே
மாறுமா காதல் தீருமா
மாட மா ஒளியே
எந்தனுயிர் என்றும் நீயே .

இவன் மு. ஏழுமலை 9789913933

கவியின் சிறப்பு: ஒருசில வார்த்தைகளை இடமிருந்து வலமோ அல்ல வலமிருந்து இடமோ படித்தால் ஒரே பொருள் தரும். எடுத்துக்காட்டு : மோனமோ , மோகமோ, மேகமே, மேயுமே, மாறுமா, மாயமா . . .. .

எழுதியவர் : மு. ஏழுமலை (17-Feb-20, 11:10 am)
சேர்த்தது : மு ஏழுமலை
Tanglish : en kathali
பார்வை : 77

மேலே