காதலும் காரணமும்

தசரதனுக்கு வந்தது காதல் கைகேகியின் மேல்
தவப்புதல்வன் இராமன் காடு செல்லக் காரணமாச்சு
தங்கத்தாரகை சீதாவுக்கு வந்தது காதல் மானின் மீது
தன்னிகறற்ற வாலி வேந்தனுக்கு மரணம் சூழலாச்சு

கோவலனுக்கு வந்தது காதல் மாதவியின் மேல்
பாண்டிய மன்னனின் பெருந்தீர்ப்பு தோல்வியாச்சு
மேகலைக்கு வந்தது காதல் பெளத்தம் மேல்
அமுதசுரபி என்னும் அதிசய பாத்திரம் கிடைக்கலாச்சு

ஆண்டாளுக்கு வந்தது காதல் அரங்கன் மேல்
அழகான பாசுரமாலை அருந்தமிழில் தோன்றலாச்சு
பெரியாழ்வானுக்கு வந்தது காதல் படையல் மேல்
பட்டு பீதாம்பரத்துடன் காட்சி கிடைத்தது இறைவனடி

குந்திதேவிக்கு வந்தது காதல் வரத்தின் மேல்
கர்ணன் பிறப்புக்கும் இறப்புக்கும் காரணமாச்சு
கம்சனுக்கு வந்தது காதல் கொலையின் மேல்
கிருட்டிணன் பிறப்பு தவிர்க்க முடியாததாய் ஆச்சு

தற்கால அரசிற்கும் வந்தது காதல் பணத்தின் மேல்
தறுமாறான வரிகள் பிறப்பதற்கு காரணமாச்சு
தரமில்லா மனிதர்களுக்கு வந்தது காதல் பதவி மேல்
தரங்கெட்ட அரசாங்கம் உருவாக காரணமாச்சு.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (5-Mar-20, 10:20 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 47

மேலே