என் இரவுகள் எரிகிறது
உலகமே உறங்கிக்
கொண்டிருக்கும் போது
என்னுள்
மெல்ல கண் விழிக்கின்றது
அவளின் நினைவுகள்
நெருப்பின்றி
என் இரவுகளை எரிக்கிறது...
கட்டுக்கடங்காத காட்டுத்தீப் போல்
என் நெஞ்சம் எங்கும்
பற்றி பரவுகிறது...
கண்ணீர் தெளித்து
அணைத்து பார்த்தேன்...
அணையாமல் அனலாய்
இதயத்தை சுட்டெரிக்கிறது...
இரவெல்லாம் கொழுந்துவிட்டு
எரியும் அவளின் நினைவுத்"தீ"
காலை விடிந்ததும்
கானல் நீராய் மறைந்துவிடுகிறது!!!
❤️சேக் உதுமான்❤️