மானங் கெட்ட இதயம்----இஹ்ஷான்-
இரவில் மச்சக் கன்னியாகும்
நிலவின் வெயில்....
மனதில் மனம் தெளிக்கும்
புல்லாங்குழலின் இதழ்...
விடியலின் வயிற்றில் பிறக்கும்
பனித்துளியின் மேனி...
மலர்களிடம் தாய்ப்பால் அருந்தும்
வண்ணாத்தியின் புரிதல்...
ஆறடி மனிதனும் குட்டையாகும்
அரும்பு மழலையின் நகைப்பு...
வானத்தின் தொட்டிலில் ஆடித்திரியும்
கைதியாக்கப்படாத சுதந்திர சிறகுகள்...
அலைகள் தேடும் கரைகளின்
ஒளிந்து கிடக்கும் உள்ளுணர் மர்மங்கள்...
மாலையின் ஆடையை கழற்றும்
செக்கச் சிவந்த செவ்வானம்...
கூச்சலாக குளிர் கீசும் மாரியின்
மூச்சுக் காற்றுகள்....
(இருந்தாலும் இருந்தாலும் இருந்தாலும்...)
அவன் கிறுக்கிய ஒவியங்களை தான்
அந்த மானங் கெட்ட அவள் இதயம்
இமைக்காது பார்க்கிறது.....
(இஹ்ஷான்)