பெண்ணின் மனம்
குழந்தையின் நிலையில்
தீராத மகிழ்வையும் -
தாயின் நிலையில்
தீராத அன்பையும் -
சகோதரி நிலையில்
தீராத பாசத்தையும் -
தோழியின் நிலையில்
தீராத நட்பையும் -
காதலி நிலையில்
தீராத காதலையும்
மனைவியின் நிலையில்
தீராத பொறுப்புணர்வையும்
வயோதிக நிலையில்
வாழ்வியல் பாடத்தையும் -
மரணித்த நிலையில்
தனிமையுணர்வையும் போதித்து -
தாங்க முடியாத காயத்தை
மனதில் ஏற்படுத்தி சென்றுவிடுகின்றது....!!!
- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி