ஊரடங்கு
![](https://eluthu.com/images/loading.gif)
ஊரடங்கு உத்தரவு உள்ளூரிலே
Lock down அயல் நாட்டிலே
பாரெங்கும் அமைதி
சுற்றும் முற்றும் யாருமில்லை
சூழ நிற்க தடை
சுதந்திர நாட்டிலே
பல இனத்தாரிடம்
இனம் புரியா பயம்
இனம் வேறாயீனும்
உயிர் பலிகள் பலவாயீனும்
உணர்வுகள் ஒன்றே
5 அறிவால் வந்ததோ
6 அறிவால் வந்ததோ
அறிவுக்கும் புலப்படவில்லை
அருந்த மருந்துமில்லை
அகற்ற வழியுண்டு
சுத்தம் கையிலே
நித்தம் மனதிலே
அனாவசிய கூடுகை
அறவே தவிர்
கொரனாவின் கோர தண்டவத்தையும்
தாண்டிடுவோம் நிச்சயமாய்
இதையும் அழித்திடுவோம்
இறைவன் அருளால்