அவளும் நிலவும்
பௌர்ணமி இரவு
வெள்ளி முழு நிலா
நீல வானில் பவனம்
வந்த நிலவோ கொஞ்சம்
அசையாது நின்றது ......
என்னென்று பார்க்க
நிலவு தன முகத்தை
கீழே மண்ணின் தெள்ளிய
தடாகத்தின் அசையா நீரில்
தன்னுரு கண்டு தன்னழகில்
மெய்மறந்தது இருக்கையில்
தடாக நீரும் கொஞ்சம் அசைந்தாட
விண்ணிலா ஆட்டம் கண்டது
அங்கு தடாகத்து நீரில் புது
நிலவு ஒன்று முளைத்திட கண்டு
வாட்டமடைந்து மெல்ல
மேலே நடைக்கட்டியது நிலவு
கள்ளச்சிரிப்பில் நகைத்தாள் அவள்
என்னவள் தடாகத்தில் தன முகம் கண்டு