திருமணநாள் வாழ்த்து
அன்னைத் தமிழில் அழகாகப் பாவனையும்
புன்னகைப் பூவே! பொன்னெழில் பெண்மானே!
சென்றவிட மெங்கும் சிறப்புக ளைச்சேர்க்கும்
கன்னல் கவியே! கனிவான உள்ளத்தால்
தென்றலைப்போல் தாலாட்டிச் சிந்தையை யீர்ப்பவளே!
பன்முகத் தன்மைகொண்ட பைந்தமிழ்ப் பாமணியே!
நின்மண நாளில் நிறைமனத் தோடுன்னை
அன்புடன் வாழ்த்தி அகமகிழ் வேன்நானே !!
சரஸ்வதி பாஸ்கரன் 25:11:2019