இறைவனிடம் ஓர் வேண்டுதல்

நிலம் புலன் வேண்டிய பணமிருந்தும்
கொரோனா போன்ற உயிர்க்கொல்லி
உலகை ஆட்டி படைக்கும்போது
நிம்மதி முற்றிலும் இழந்தபோது
அகந்தை தன் களை இழந்து
ஆழ் உறக்கத்தில் போய்விடும் பொது
விஞானிகளும் மருத்துவரும் திக்குமுக்காடிப்போய்
ஆனாலும் முயற்சி விடாது இருக்கும்
இன்றைய உலக நிலையில் மனிதன்
நம்புவது தன்னை அல்ல
தன்னைப் படைத்தோனின் கருணை ஒன்றே
நன்மையையும் தீமையும் வருவதும் போவதும்
அவன் செயலே என்பர் ஆன்றோர்
கோயிலுக்கு சென்று மன்றிடலாம் மனமுருக வேண்டி
நிற்கலாம் 'அவன்' தயைக்கு இந்த
கொடிய கொரோனாவின் பிடியிலிருந்து தப்பிட
என்று கோயிலுக்கு சென்றால்
கோயில் எல்லாம் நடை சாத்தப்பட்டிருக்க
இனி எங்கு செல்வான் மனிதன்
யார் தயை வேண்டி ?
இறைவா நீ தான் இதற்கு விடை தரவேண்டும்
மூடி இருக்கும் கோயில்களின் முன்னே
மானசீகமாய் நான் வைக்கும் முறையீடு இது இறைவா
மனித குலம் அழியாதிருக்க உன் யோகா நித்திரையிலிருந்து
விழித்தெழுவாய் ஆண்டவனே இந்த
கொரோனா கொடியோனை அழித்துவிட்டு மாந்தரை மீண்டும் நிம்மதியாய் இருக்க செய்வாய்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Mar-20, 11:47 am)
பார்வை : 110

மேலே