தாயப்போல நீயெனக்கு(அக்கா)

அனைவருக்கும் வணக்கம்...
என்னுடைய உடன்பிறவா சகோதரி நான் செல்லமாய் "மம்மி(அம்மா)" என்று அழைக்கும் என்னை ஈன்றெடுக்காத தாய்...
அவளுக்கு ஒரு கவிதையை சமர்ப்பித்தேன்...
அக்கவிதையில் உள்ள ஒவ்வொரு வரியும் எங்கள் இருவருக்கிடையில் உள்ள நெருக்கத்தைச் சொல்லும்...
எங்களுக்கு இடையில் செல்லச் சண்டைகளும் மோதல்களும் என்றும் ஓயாதது!
ஆனாலும் என் அக்கா(அம்மா)வின் மேல் பெரிதும் காதல்(பாசம்) கொண்டிருக்கிறேன்...
இக்கவிதையை படித்துவிட்டு பிறகு கூறுங்கள் எங்கள் இருவரின் உறவை பற்றி
நன்றி...



தாயப்போல நீயெனக்கு
சத்தியமா தோனுது
சின்னசின்ன பாசம் காட்ட
உன்ன மட்டும் தேடுது-என்
மனசு...
தெனந்தெனம் என்னமட்டும்
திட்டிகிட்டு நீயிருப்ப
வேறுவேல இல்லையினு
சொல்லிகிட்டு நானிருப்பேன்!
காதலிச்ச பொண்ணுமேல கூட
பாசத்த வைக்கவில்ல...
இந்தளவு!
ஒருவருடம் ஓடிடுச்சி-வேல
நேரங்கூட மாறிடுச்சி
ஆனா
நீமட்டும் மாறவில்ல....
பரீட்சையினு லீவுபோட்டா
அப்பப்ப வந்துபோவேன்
உம்முகத்த பாக்கத்தான்..
பாக்க என்ன சாக்குனாக்கா?
பத்துருவா காசு கேப்பேன்..
தேனிலவு தேவதனு
அடுத்தவள சொன்னாலும்
எங்கக்கா அழகினு!
ஒருநாளும் சொல்லலயே...
உன்ன பாத்து...
மணமுடிச்சி போனாலும்
என்னநீயும் மறந்துடாத!
என்னத்தான் நடந்தாலும்
என்னநீயும் பிரிஞ்சிடாத!

எழுதியவர் : Sahul Hameed (8-Apr-20, 11:08 pm)
சேர்த்தது : HSHameed
பார்வை : 163

மேலே