வண்ணப் பாடல்

வண்ணப் பாடல் ...!!!
***************************
தான தனதன தான தனதன
தான தனதன தனதானா ( அரையடிக்கு )

ஆதி சிவனுடன் நாண மிகநட
மாடு முமையவள் மகனாரை
ஆசை யுடன்குற மாது தழுவிடும்
ஆறு முகமுடை மணவாளா !

தேசு நிறைபவ ஞான வடிவொடு
தேவ மகளுட னருள்வேளே
தேடு விழிகளில் நேய முடனொரு
தீப தரிசன மருள்வாயே !

நீதி நெறியினை நாளு மருளிட
நீல மயினிலில் விரைவோடே
நேரும் வினைகளும் மாறி விலகிட
நீயும் பரிவொடு வருவாயே !

வீதி வழிகளில் யாரு மிலையென
வேல னுனதுளம் நினையாதோ
வேறு வழியற வாடு மனிதரும்
மீள வரமது புரிவாயே !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (12-Apr-20, 1:45 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 52

மேலே