எண்சீர் வண்ண விருத்தம்
எண்சீர் வண்ண விருத்தம் ...!!!
*****************************************
தானதன தானதன தானதன தந்தா
தானதன தானதன தானதன தந்தா
வீதிதனி லேயுலவி டாமலிரு நன்றே
வேதனையு மாயுமொரு வேளைவரு மென்றே
சாதிமத பேதமற நாடுயரு மென்றே
தாவிவரு மாவலொடு பாடுபடு நன்றே
பீதியொடு நாள்விரையும் பேரவல மிங்கே
பேரிடியி லேயுலகு வாடுவது கண்டே
மாதவனை நாடியிரு பாதம்பணி நன்றே
மாவிடரு மோடிவிடும் மேதினியி லிங்கே !!
சியாமளா ராஜசேகர்