ஒளி தாங்கி அவள்

நந்தமிழரில் பெரும்பாலோர்
தாம்பெற்ற பிள்ளைகளுக்கு
பிறமொழிப் பெயர்களைச் சூட்டி
பெருமிதம் கொள்கிறார்.
###
நாங்ளும் அதற்கு
உடன்பட்ட தமிழர்களே!
எங்களுக்கும் அழகான
பெண் குழந்தை பிறந்தது.
####
அதற்கொரு பிறமொழிப் பெயரை
தேடிப் பார்த்தபோது
ஸ்காட்லாந்தில் நிலவும்
பெயருள்ள ஒரு நடிகை
எங்கள் நினைவுக்கு வந்தார்.
@@@
அவர் பெயரை
எங்கள் மகளுக்கு
சூட்டி மகிந்திட
ஆர்வம் கொண்டோம்.
@@@@
'குரங்கி' என்ற பெயர்
இந்தி மொழியிலுண்டு.
அப்பெயரைப் பெண் குழந்தை
ஒன்றுக்குக் சூட்டிவிட்டு
"இப்பெயர் தமிழ் 'குரங்கி' அல்ல
இந்தி 'குரங்கி'" என்று கூறினால்
"ஸ்வீட் நேம்" என்று சொல்லி
பாராட்டுவோர் பலருண்டு.
#####
தமிழ்ப் பெயரை வைத்தால்
முகம் சுளிப்பவர்க்கு மத்தியில்
வாழும் நாங்களும்
அழகான நடிகை 'இலியானா'
பெயரையே தேர்வு செய்து
எங்கள் மகளுக்கு சூட்டினோம்.
@@@@@@@
பெயரின் பொருள் பற்றி
தமிழர்கள் கேட்பதில்லை.
தமிழ்ப் பெயராக மட்டும்
இருத்தல் கூடாது.
######
பொருள் அறிந்தே நாங்கள்
'இலியானா'வைத் தேர்வு செய்தோம்.
வாழ்த்துங்கள் எங்கள் மகளை
"ஸ்வீட் நேம்" என்று பாராட்டுங்கள்.
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
Ileana/Aleana = light-hearted (Scottish name)
Kurangi = deer

எழுதியவர் : மலர் (12-Apr-20, 11:05 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 79

மேலே