அடைக்கலம்
வீட்டில் மகிழ்ந்தே விளையாடு
வெற்றிக் கொள்ளும் உன் நாடு
வாட்டி வதைக்கும் துயர்யாவும்
வந்த வழியே ஓடிவிடும்
ஆட்டிப் படைக்கும் அந்நோயை
அனைவரும் சேர்ந்து விரட்டிடுவோம்
தீட்டிக் கொள்வாய் படைக்கலமே
தினமும் வீடே அடைக்கலமே