சென்னை - மெரினா

சென்னை - மெரினா

வறட்சிக்கு சுண்டல் விற்ற
கதை மட்டுமல்ல - இங்கே
புரட்சிக்கு வித்திட்ட
கதையும் உண்டு - இங்கே
சிறார்களின் - சேட்டை
கதைகளும் உண்டு -
பெரியவர்களின் பேட்டை
கதைகளும் உண்டு - இங்கே
கோட்டையை பிடித்த
கதைகளும் உண்டு -
கோட்டையை பிடிக்காமல்-
கோட்டையை - கோட்டைவிட்ட
கதைகளும் உண்டு -

இது என்றும்
மெர்சலான மெரினா -
இது என்றும்
விசுவாசமுள்ள மெரினா -
தமிழருக்கும் -
தமிழினத்துக்கும் -
துன்பம் வரும்போது -
விசுவரூபமாகும் மெரினா -

இது - எங்கள்
திராவிட சிங்கங்கள்
துயில்கொண்ட மெரினா -
பல - திராவிட குழந்தைகள்
பயில்கின்ற மெரினா -

இது -
வரலாற்றின் யுத்தசத்தம்
அரங்கேறிய மெரினா-
இது -
காதலர்களின் முத்தசத்தம்
அரங்கேறுகின்ற மெரினா -

இதில் -
நாலுபேரு சேர்ந்து நடக்க
அன்றே வந்தது தடை -
இது -
கொரோனாவின் புரட்சியல்ல -
இது - எங்கள்
மாணவர்களின் புனித புரட்சி
இது - தமிழரின்
தன்மானம் காத்த புரட்சி -

இயல் -
இசை -
நாடகம் -
மூன்றும் முத்தமிழுக்கு அழகு -
தென் சென்னை-
வட சென்னை -
மத்திய சென்னை -
மூன்றும் தலைநகருக்கு அழகு -

இது - பல
தலைவர்கள் வாழ்ந்த -
வாழுகின்ற தலை நகரம் -

இங்கே - பூர்வீகமாய்
வசிப்பவர்களை விட
வந்தவர்களே அதிகம் -
வந்தவர்களில் சிலர் -பிரச்சனை
வரும்போது ஓடிவிடுவர் -ஆனால்
எது வந்தாலும்- போனாலும்
செத்தாலும் -வாழ்ந்தாலும்-
நாங்கள் என்றும் கெத்தா -
நடந்து வருவோம்....
ஏன்னா - இது
எங்க ஊரு சென்னை-மெரினா!!!

- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (18-Apr-20, 5:09 am)
பார்வை : 46

மேலே