பெண்

பெண்ணிற்கே பெண்ணிற்கு மட்டுமே இறைவன்
ஓர் தனி அழகு வைத்தான்
அவள் கண்ணிப் பருவம் எய்தி
மேலாடைக்கொண்டு மறைக்க முயலும்
எழிலாம் பருவப் பெண்ணின் மார்பகமாம்
அது முழுப் பொலிவும் மகத்துவமும்
பெரும் நாள் அந்நாள் அவள்
மணமானப் பின் பிள்ளை ஒன்று
மணாளனுக்கு பெற்றுத்தந்து அவன் அதை
உச்சி முகர்ந்து உவகையில் முதுதுகொடுத்து
இன்பத்தின் இமயத்தில் இருக்கையில்
அப்பிள்ளைக்கு பெண்ணவள் மூடிய ஆடைப்பின்னே
பாலூட்டி தாலாட்டும் அந்நாள்.....
அங்கத்திற்கு வெறும் அங்க அணிகலன் அல்லாது
பிள்ளையின் பசிபோக்கி அவனுக்கு
ஞானமும் கலந்தூட்டும் அமுத கலசம்

பெண்ணே தாய்க்குலமே உன்னை
இறைவியை வாழவைக்கும் தெய்வம்தான் என்பேன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-May-20, 3:25 pm)
Tanglish : pen
பார்வை : 106

மேலே