வந்தும் போனதும் காதல்

காதலைத்தேடி நான் அலையவில்லை
காதல் புறாவாய் வந்தாளவள்
வந்து என்மனதைக் கொத்த
காதல் பரவியது என்னுடலில்-இப்படி
காதல் தீமூட்டி என்னைக்
காதலித்த அவள் பறந்துபோனாள்
சுவடு ஏதும் தெரியாது
அவள் தீண்டிய இதயத்தில்
காதல் புண் ஆறவில்லை
அந்தப் புறாவை தேடுவதா
இல்லை காதலை மறந்து
வாழ்ந்திடவா புரியலையே காமதேவா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு� (17-May-20, 8:12 am)
பார்வை : 120

மேலே