துப்பட்டா VS கைக்குட்டை

துகிலே துகிலே
நீ துப்பட்டாவாகி தோளில் தவழ்கிறாய்
முகில் திடீரென்று பொழிந்தால்
குடையாகிக் காக்கிறாய்
கொரோனா வீதியில் நடக்கும் போது
முக மூடியாகி பாதுகாக்கிறாய்
கோடையிலும் குளிரிலும்
தலையிலும் கழுத்திலும் கவசமாய் உதவுகிறாய் !
பெண்களுக்கு சேவை செய்யும்
துப்பட்டாத் தோழி உனக்கு
பொன்னாடை போர்த்தலாம் நோபல் வழங்கலாம்
ஆயினும் நன்றி சொன்னேன் !
பாவம்
பெர்முடாவும் பேன்டும் போட்ட
இந்த ஆண்கள்
இவர்கள் கைக்குட்டை எல்லாம்
எந்த மூலைக்கு !

எழுதியவர் : கவின் சாரலன் (17-May-20, 8:11 pm)
பார்வை : 141

மேலே