காதல் நினைவுகள்

உன் விரல்கள் ஒரு
விசித்திரமான வீணையோ வித்தியாசமாய்
பிரதிபலிக்கிறது விதவிதமான இசைகளை விழிகளின் வழியாக.....
நிசப்தம் நிறைந்த நிலவொளியில்
விரல் வீணை மீட்ட கானா காண்கிறேன்
விலகி சென்றது வீணை மட்டும் அல்ல
வெளிச்சம் தந்த வெண்ணிலவும் தான்
என்பது உணராமல் ...
விரல்கள் மீது கோவம் கொள்கிறேன் உன் விரலைகளை விட்டு விலகி நின்றதால் ...
வீதி எங்கும் சுற்றி திரிகிறேன் விரல் பிடித்த நடந்த நாட்களை எண்ணி ...
விதி என்ற வினா தாளில் இவ்வளவு பாகுபாடு எனோ ?
எனக்கு வந்த கேள்விகள் எல்லாம் "கோடிட்ட இடங்களை நிரப்புக"
...அதில்
ஆயிரும் கேள்விகள் இருந்தாலும்
அனைத்திற்கும் பதில் ஒன்றே அது "நீ "
உனக்கு வந்த முதல் கேள்வியே
"சரியான விடையை தேர்ந்து எடு "
இல்லாத என் பெயரை எண்ணி கலங்குவதா ?
இல்லை இருப்பதில் எது சிறந்தது என்று எடுத்துரைப்பதா ??
செய்வதறியாமல் சேமித்து வைத்து உள்ளேன் சிவந்த விழிகளின் சிறந்த பரிசு துளிகளை ...
இருந்தும் கொடுத்து கெடுக்கு மனமின்றி
மௌனம் எனும் மாற்று பரிசை மனதார பரிமாறுகிறேன் மணமேடையில் .....
முற்று புள்ளி
வைக்க நினைத்தாலும்
மீண்டும் இரண்டு புள்ளிகள் சேர்த்து கொள்(ல்) கிறது
உன் நினைவுகள் ......
கதிர் .ந

எழுதியவர் : கதிர் .ந (26-May-20, 9:46 am)
சேர்த்தது : நந்திதா
Tanglish : kaadhal ninaivukal
பார்வை : 260

மேலே