302 கடுஞ்சினம் கொள்வது கல் அம்பைக் கடிவதாம் - சினம் 8

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

பைதலே யெய்த லாதிப்
..பரன்செய லாமப் பைதல்
செய்தவர் தமைச்சி னத்தல்
..சினவரா தன்மேற் கல்லைப்
பெய்தவன் தனைவிட் டக்கல்
..பிளந்திடப் பொரலுங் கையால்
எய்தவன் தனைவிட் டம்பை
..முனிதலு மேய்க்கு மாலோ. 8

- சினம்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”துன்பம் அடைதல் முழுமுதற் கடவுளின் ஆணைப் படியாகும். அத்துன்பத்தை நமக்குச் செய்தவரிடம் சினம் கொள்வது, சினம் கொள்ளும்படி தம்மேல் கல் எறியச் செய்தவனை விட்டுவிட்டு அக்கல்லைப் பிளக்கப் புறப்படுவதற்கும், அம்பு எய்தவனை விட்டுவிட்டு அம்பை முனிவதற்கும் ஒப்பாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

பைதல் - துன்பம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Jun-20, 8:27 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

சிறந்த கட்டுரைகள்

மேலே